வட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் – பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, மெட்டா நிறுவனம் புதிய ஏஐ அம்சங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய அப்டேட்களில், செட் தீம்களை ஏஐ மூலம் தனிப்பயனாக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் செயலியில் இருந்தபடியே புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பின்னணியை (Background) மாற்றும் வசதிகள் அடங்கும்.
இந்த அம்சங்கள் விரைவில் உலகளவில் அறிமுகமாகவுள்ளன என மெட்டா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ‘அரட்டை’ போன்ற மெய்செய்தி செயலிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், போட்டியில் தங்களது நிலைமையை நிலைநாட்டும் நோக்கில் மெட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





