ஆஸ்திரேலியாவில் முதலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட நபரின் உடல் – அதிர்ச்சியில் பொலிஸார்
ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்கச் சென்ற நபரின் உடல் பாகங்கள் முதலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
65 வயதுடைய Kevin Darmody வடக்குக் குவீன்ஸ்லந்தில் உள்ள Lakefield தேசியப் பூங்காவில் சிலருடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.
அங்குள்ள நீரில் இருந்த முதலையை அவர்கள் விரட்டி மீன்பிடிக்க ஆரம்பித்ததாக அதிகாரிகள் கூறினர்.
டார்மோடி உரக்கக் கத்தியவாறு தண்ணீருக்குள் விழுந்த சத்தம் கேட்டதாக அங்கு இருந்தவர்கள் கூறினர். அதன் பின் 2 முதலைகளை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
முதலைகளின் சடலங்களைப் பரிசோதனை செய்தபோது டார்மோடியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
2 முதலைகளும் டார்மோடியைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.





