ஆட்சியை தக்க வைக்க சூழ்ச்சி: டில்வின் சில்வா மறுப்பு!
“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என்று ஜே.வி.பியின் JVP செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார்.
அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்போம். அதனை செய்வதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் ஆசியுடன் ஆட்சியை தொடரவே விரும்புகின்றோம். மாறாக மக்கள் விருப்பமின்றி – பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம். ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு சூழ்ச்சி செய்ய மாட்டோம்.
அதிகாரத்தை நாம் மோசடிக்காக பயன்படுத்தவில்லை. நாட்டுக்காகவே பயன்படுத்துகின்றோம். நாட்டுக்கு சேவைசெய்த திருப்தியுடன் மரணிக்க வேண்டும். அது போதும்.
மக்கள் ஆசியுடன் எமது ஆட்சி தொடரும். நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.” – எனவும் டில்வின் சில்வா Tilvin Silva
குறிப்பிட்டார்.




