அதைப்பற்றி எனக்கே தெரியவில்லை : மணிரத்னம் உறுதி

இயக்குனர் மணிரத்னம் தற்போது தக் லைப் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
கமல், சிம்பு, த்ரிஷா உட்பட பலர் நடித்து இருக்கும் தக் லைப் படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தக் லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி மற்றும் நடிகை ருக்மிணி வசந்த் ஆகியோரை வைத்து ஒரு ரொமான்டிக் படம் எடுக்க போகிறார் மணிரத்னம் என சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.
அது பற்றி ஒரு பேட்டியில் மணிரத்னத்திடம் கேட்டதற்கு, ‘அதை செய்திகளில் தான் பார்த்தேன், என்ன படம் பற்றி சொல்கிறார்கள் என எனக்கே தெரியவில்லை.”
“அடுத்து இரண்டு ஸ்கிரிப்ட்கள் எழுதி வருகிறேன். அதில் யார் நடிப்பார்கள் என தெரியாது” என மணிரத்னம் கூறி இருக்கிறார்
(Visited 3 times, 1 visits today)