“ட்ரம்ப் யுகம்”: ஐரோப்பிய நாடுகளைச் சாடும் லார்ட் மண்டெல்சன்
அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் லார்ட் மண்டெல்சன் (Lord Mandelson), கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மரின் எதிர்வினையை “நாடகத்தனம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ட்ரம்ப் யுகத்தில்” வெறும் வார்த்தைகளால் மட்டும் முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பிடிபட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், கடந்த பத்தாண்டுகளில் வழக்கமான இராஜதந்திரம் சாதிக்காததை ட்ரம்ப் ஒரே நாளில் சாதித்துக் காட்டியுள்ளதாகப் புகழ்ந்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் சர்வதேச விதிகளைப் பேசுவதை விடுத்து, ஐரோப்பா தனது ராணுவ மற்றும் நிதிப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் இப்போதைய நிலைப்பாடு அவர்களின் புவிசார் அரசியல் பலவீனத்தையே காட்டுவதாகவும் மண்டெல்சன் தனது கட்டுரையில் சாடியுள்ளார்.





