அடுத்த ஆண்டு முதல் பாடசாலை வாகனங்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை வாகனங்களில் பாதுகாப்பு கெமராக்களை பொருத்தும் நடவடிக்கை கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொது போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டுதல்கள் ஜனவரி 2026 முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் மேலும் அறிவித்துள்ளார்.




