ஜெர்மனியில் கட்டாயமாகும் சட்டம் – பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஜெர்மனியில் புதிய சட்டம் ஒன்று காட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிறந்து குழந்தைகள் 3 வயதாக இருக்கும் பொழுது பாலர் பாடசாலையில் கல்வி கற்பதற்கு அரசாங்கமானது அவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்பது சட்டத்தில் கூறப்பட்ட விடயமாக கருதப்படுகின்றது.
இந்த விடயத்தை கருத்தில் கொண்டு ஜெர்மன் அரசாங்கமானது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது ஜெர்மன் நாட்டில் மொத்தமாக 430000 இவ்வகையான இடங்கள் உடனடியாக தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதாவது குழந்தைகளுக்கு சட்ட ரீதியான உரிமை இந்த பாலர் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு இருந்தாலும், பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு பாடசாலைகளில் இடப்பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய அம்சமாக பாலர் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.