பிரேசிலில் லாட்டரியில் மில்லியன் பவுண்டுகளை வென்ற நபர் மாரடைப்பால் மரணம்!
பிரேசிலின் மிகப்பெரிய லாட்டரியில் 26.5 மில்லியன் பவுண்டுகளை வென்ற ஒருவர் பல் சிகிச்சைக்காக பணத்தை செலவழித்த சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.
மாட்டோ க்ரோஸ்ஸோவைச் சேர்ந்த கால்நடை விவசாயி அன்டோனியோ லோப்ஸ் சிக்வேரா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாட்டரி சீட்டில் ஜாக்பாட்டை வென்றார்.
அவரது வெற்றியைத் தொடர்ந்து, அவர் பணத்தில் ஒரு பகுதியை பல் சிகிச்சைக்காக செலவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அறுவை சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் இறக்கும் போது திரு சிக்வேரா நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டதாகவும், அவரை உயிர்ப்பிக்க முயற்சித்த போதிலும், அவர் இறந்துவிட்டதாகவும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
உள்ளூர் காவல்துறையின் தலைவர் எடிசன் பிக், இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனக் கூறியுள்ளார்.