சீனாவில் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் ஒன்றிணைந்த நபர் – நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்
சீனாவில் வாகன ஓட்டுநர் ஒருவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமது குடும்பத்துடன் ஒன்றிணைந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
2016ஆம் ஆண்டில் குயாங் பகுதியில் பெங் எனப்படும் குறித்த நபர் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது அவரை ஒரு பயணி அணுகியுள்ளார்.
நீண்டகால நண்பர்போல அவர் பெங்கிடம் பேசினார். தம்மை வேறு ஒருவர் எனத் தவறாக எண்ணிப் பேசுகிறார் என்று பெங் நினைத்தார். பேசப்பேச அந்தப் பயணி தமது இரட்டைச் சகோதரர் என்பதை பெங் அறிந்துக் கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 4ஆம் திகதி பெங் தம் சொந்தக் குடும்பத்துடன் இணைந்தார். அவருக்குக் கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது.
சகோதரரைக் கண்ட பூரிப்புடன் பேசிய பெங் “கண்ணாடியில் என் முகத்தைப் பார்ப்பது போல இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன் இரட்டைச் சகோதரர்கள் பிறந்ததும் இறந்துவிட்டதாக மருத்துவர் தாயாரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இரு வேறு குடும்பங்களால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டுள்ளார்.
பெங் பலமுறை தமது பெற்றோரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார். ஆனால் முயற்சி கைகூடவில்லை.
பெங்கின் கதை சீனா மக்களின் மனத்தைக் கவர்ந்த நிகழ்வாகியுள்ளது.