ஆஸ்திரேலியாவில் கொடிய விஷமுள்ள 102 பாம்புகளுடன் வசித்து வந்த நபர்!
ஆஸ்திரேலியாவில் தனது பின்புற தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட “பயங்கரமான” விஷ பாம்புகள் வசித்து வருவதைக் கண்டு ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ஸ்டீவன் என்பவர் தனது தோட்டத்திற்குள் 102 சிவப்பு வயிற்றுப் பாம்புகள் இனங்காணப்பட்டுள்ளது.
பாம்பு பிடிப்பவர்களை அழைத்த பிறகு, நிலைமை “அசாதாரணமானது” என்று பின்னர் அவற்றை அகற்ற உதவுவதாக அவர்கள் ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட பாம்புகளின் கொத்துக்களைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)





