ஆஸ்திரேலியாவில் வணக்கம் செலுத்தியமைக்காக சிறை செல்லும் நபர்!
ஆஸ்திரேலியாவில் வணக்கம் செலுத்தியமைக்காக நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் பதிவாகியுள்ளது.
ஜேக்கப் ஹெர்சன்ட் என்ற 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நாஜி சல்யூட் செய்ததற்காக மேற்படி தண்டனையை பெற்றுள்ளார்.
மெல்போர்னின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நாஜி சைகை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 27, 2023 அன்று விக்டோரியா கவுண்டி நீதிமன்றத்திற்கு வெளியே செய்திக் கேமராக்கள் முன் தடை செய்யப்பட்ட சைகையை காட்டி வணக்கம் செலுத்தியமைக்காக வன்முறைச் சீர்கேட்டை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாஜி வணக்கம் செலுத்துவது சில நாட்களுக்கு முன்னர் மாநில பாராளுமன்றத்தால் தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.