ஹொங்கொங்கில் பரபரப்பு – பெண்களை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் செய்த கொடூரம்
 
																																		ஹொங்கொங் கடைதொகுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை இரண்டு பெண்களை நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
அங்கு வந்த பொலிஸாரால் கத்தியால் குத்திய நபர் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
டைமண்ட் ஹில்லில் உள்ள பிளாசா ஹொலிவுட் கடைத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களில் இந்த சம்பவம் முழுமையாகப் பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் நபர் ஒருவர், பெண்களை பின்னாலிருந்து நெருங்குவதைக் காணொளியில் பார்க்க முடிந்துள்ளது.
ஒரு பெண்ணை அந்த நபர் மாறி மாறி கத்தியால் குத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது பெண் அவனைத் தடுக்க பலமுறை முயற்சி செய்கிறார்.
அவரும் கத்தியால் குத்தப்பட்டார். அப்போது அங் கிருந்த யாரும் உதவ முன்வரவில்லை என தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட இரண்டு பெண்களுக்கும் 22 முதல் 26 வயது இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவின்றி இருந்த அவர்கள், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் ஒரு பெண் 25க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இரண்டு பெண்களுக்கும் தாக்குதல் நடத்தியவரைத் தெரியும் என்று கூறுவதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
        



 
                         
                            
