இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்த ‘இரும்பு நுரையீரலில் மனிதன் காலாமானார்!
70 ஆண்டுகளுக்கும் மேலாக இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்த ‘இரும்பு நுரையீரலில் மனிதன்’ என அழைக்கப்படும் பால் அலெக்சாண்டர் காலமானார்.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் மரணமடைந்தபோது அவருக்கு வயது 78.
பால் தனது 6 வயதில் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போயிருந்தார்.
பின்னர் அவரது உடலின் கீழ் பகுதி உயிரற்ற நிலையில் இருந்து, இந்த செயற்கை நுரையீரல் இயந்திரத்தின் உதவியுடன் அவர் வாழ்ந்து வந்தார்.
வாயைப் பயன்படுத்தி ஓவியம் வரைந்து எழுதும் பால், ஒரு புத்தகத்தை எழுதி டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றுள்ளார்.
செயற்கை நுரையீரல் இயந்திரத்தின் உதவியுடன் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற வரலாற்றில் இடம் பெறுவார்.
(Visited 3 times, 1 visits today)