சிங்கப்பூரில் 11வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த நபர்

சிங்கப்பூரில் – பிளாக் 38 லோரோங் 5 தோ பாயோ பிளாட்டின் கீழே உள்ள துணி காயப்போடும் ரேக்கில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.
SCDF அதிகாரிகள் அந்த நபரை ரேக்கில் இருந்து மீட்டு எடுக்கும் காட்சியின் புகைப்படங்களை மதர்ஷிப் வெளியிட்டுள்ளது.
அந்த நபர் 11வது மாடியில் வசித்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். கடந்த 8ஆம் திகதியன்று காலை 9 மணியளவில் பலத்த சத்ததுடன் கீழே விழுந்த அவர், பின்னர் வலியில் கதறியதாகவும் அங்கு வசிப்பவர் ஒருவர் கூறினார்.
அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் எந்த சதியும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை. என போலீசார் கூறியுள்ளனர். இது குறித்த விசாரணைகள் நடந்து வருகிறது.
(Visited 10 times, 1 visits today)