உத்தரபிரதேசத்தில் கணிதம் தெரியாத 4 வயது மகளை அடித்து கொன்ற நபர்
உத்தரபிரதேசத்தைச்(Uttar Pradesh) சேர்ந்த ஒருவர் தனது நான்கு வயது மகள் 50 வரை எண்ணத் தவறியதற்காக அடித்து கொலை செய்துள்ளார்.
ஜனவரி 21ம் தகுதி கிருஷ்ணா ஜெய்ஸ்வால்(Krishna Jaiswal) வீட்டில் தனது மகளுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிருஷ்ணா சிறுமியை 50 வயது வரை எண்ணச் சொன்னார், ஆனால் அவள் அதைச் செய்யத் தவறிவிட்டாள். இதனால் கோபமடைந்த அவர் மயக்கமடையும் அளவுக்கு அவளை கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.




