மெக்சிகோ ஜனாதிபதியை தகாத முறையில் தொட்ட ஒருவர் கைது
மெக்சிகோவில்(Mexico) ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமை(Claudia Sheinbaum) தகாத முறையில் தொட்டதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுக் கல்வி அமைச்சகத்தில் நடந்த ஒரு நிகழ்விற்கு முன்னதாக, 63 வயதான கிளாடியா ஷீன்பாம், பொது மக்களுக்கு மத்தியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த போது பின்னால் இருந்து ஒரு நபர் அவரை அணுகியதாக எல் யுனிவர்சல்(El Universal) மற்றும் எல் சோல் டி மெக்ஸிகோ(El Sol de Mexico) செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய அரண்மனைக்கு வெளியே நடந்த சம்பவத்தில், அந்த நபர் கூட்டத்திலிருந்து வெளியே வந்து கிளாடியா ஷீன்பாமை முத்தமிட முயற்சித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபருக்கு “முத்தம், தொடுதல், துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பாலியல் வன்கொடுமை தண்டனைச் சட்டத்தின்படி 1 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என்று மெக்சிகன் பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.





