இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளை தகாத முறையில் தொட்ட நபர் கைது
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், இந்தூரில் (Indore) உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக அணுகிய குற்றச்சாட்டில், ஆசாத் (Azad) நகரைச் சேர்ந்த 28 வயது அகீல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை, இரண்டு வீராங்கனைகளும் தங்கள் ஹோட்டலில் இருந்து வேறொரு ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து வீராங்கனைகள் தங்கள் அணியின் பாதுகாப்பு அதிகாரி டேனி சிம்மன்ஸைத் (Danny Simmons) தொடர்பு கொண்டு உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை அணுகி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தீவிர விசாரணையை தொடர்ந்து அகீல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பிரிவு 74 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 78 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்து, வீராங்கனைகளை அணுகி, அவர்களை தகாத முறையில் தொட்டு வேகமாக சென்றுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





