குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மலேசியா!
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யவுள்ளதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இம்முறை அடுத்த ஆண்டு (2026) முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் (Fahmi Fadzil), நிதி மோசடிகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் பாதிப்புகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதே இந்த தடையின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் இந்த தடை சேர்க்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எழுந்துள்ள உலகளாவிய கவலைகள் காரணமாக வயது வரம்புகளை அமல்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கை எடுத்துள்ளன.
அண்மையில் ஆஸ்திரேலியாவிலும் இவ்வாறான தடை அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




