பிரித்தானியாவில் மூடப்பட்ட முக்கிய சாலை : பயணிகள் அவதி!
பிரித்தானியாவில் பிரிஸ்டலுக்கு அருகிலுள்ள M4 பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் பாலத்திற்கு மேற்கு நோக்கிச் செல்லும் நுழைவுச் சாலை, இன்று திடீரென மூடப்பட்டது.
டீசல் கசிவு காரணமாக குறித்த பாலம் இரவு முழுவதும் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் பாதை பாலத்தின் நுழைவாயில் சீர் அமைக்கப்படவுள்ளதால் காலை நேரத்திலும் குறித்த பாலம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வேல்ஸ் மற்றும் பிரிஸ்டல் இடையே தினமும் காலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இரு திசைகளிலும் திறந்திருக்கும் M48 செவர்ன் பாலம் வழியாக மாற்றுப்பாதைகள் இயக்கப்படுகின்றன.
(Visited 37 times, 1 visits today)





