பாரிய தீ பரவல்: Glasgow மத்திய ரயில் நிலைய சேவைகள் ரத்து!
ஸ்காட்லாந்தின் மிகவும் பரபரப்பான கிளாஸ்கோ மத்திய ரயில் நிலையம் Glasgow Central Station தற்காலிகமாக மூடப்பட்டது.
ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
யூனியன் தெருவில் உள்ள ஒரு கடையில் தொடங்கிய இந்த தீ, அருகிலுள்ள பழமையான கட்டிடங்களுக்கு பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீயணைப்பு படையினர் தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரயில் நிலையத்திற்கு நேரடி பாதிப்புகள் ஏதுமில்லை என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரயில் நிலையம் எப்போது மீள திறக்கப்படும் என்பது தொடர்பில் உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.




