பிரான்ஸில் முக்கிய வீதிகள் முடங்கியது – டிராக்டரை நிறுத்தி மறியல்
பிரான்ஸில் அரசின் கொள்கை முடிவுகளை கண்டித்து விவசாய சங்கங்கள் வாரக்கணக்கில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
ஜெர்மனி, போலந்து, ருமேனியா போன்ற ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து பிரான்ஸிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் குறைந்த விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்வதாலும், ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாலும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், விவசாய எந்திரங்களுக்கான டீசல் மாணியத்தை ரத்து செய்ய அரசு பரிசீலித்துவருவதை கண்டித்து ரென் நகரின் முக்கிய வீதிகளின் குறுக்கே டிராக்டரை நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(Visited 9 times, 1 visits today)