வங்கதேச இந்து நபர் திபு தாஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
வங்கதேச(Bangladesh) காவல்துறையினர் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கொல்லப்பட்ட சிறுபான்மை இந்து ஆடைத் தொழிலாளி திப்பு சந்திர தாஸை(Thibu Chandra Das) கொடூரமாக அடித்துக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் யாசின் அராபத்(Yasin Arafat) என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
டிசம்பர் 18 அன்று மைமென்சிங் மாவட்டத்தில் இந்தக் கொலை நடந்தது. மைமென்சிங்(Mymensingh) நகரில் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி 25 வயதான திபு சந்திர தாஸ் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
காவல்துறையின் கூற்றுப்படி, தொழிற்சாலை ஊழியரான திபு சந்திர தாஸ் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசி குற்றச்சாட்டுகளுக்காக தொழிற்சாலைக்கு வெளியே ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது





