இலங்கையில் பதுளை நோக்கி செல்லும் அஞ்சல் ரயில் இரத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு நேர அஞ்சல் ரயிலை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நிலச்சரிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பாதையில் ரயில் சேவை தடைபட்டதை அடுத்து ரயில்வே திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன்படி கெலிஓயாவுக்கும் கம்பளைக்கும் இடையில் இரண்டு இடங்களிலும் தெமோதர மற்றும் ஹாலியாலக்கு இடையிலும் புகையிரத பாதையில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)