அரசியல் இலங்கை

மொட்டு கட்சியை கட்டியெழுப்ப மஹிந்த அணி வியூகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கிராமிய மட்டத்தில் மேலும் வலுப்படுத்தி, மாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP அரசியல் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச , கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!