இலங்கை செய்தி

ஷிரந்தியுடன் FCID வந்த மஹிந்த: CID சென்றார் நாமல்!

“ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு NPP அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே Manoj Gamage தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச Shiranthi Rajapaksa , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (03) முன்னிலையானார்.

அவருடன் மஹிந்த ராஜபக்சவும் வருகை தந்திருந்தார். FCID
வளாகத்தில் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். ஷிரந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பட்டன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போதே மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.

“சிரிலிய கணக்கு தொடர்பிலேயே விசாரணை நடக்கின்றது.
முதல் பெண்மணியாக இருந்தபோது அநாதை குழந்தைகளுக்கு அவர் கல்வி வழங்கியவர். இதனை அவர் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தவில்லை.

பாலர் பாடசாலைகளையும் ஆரம்பித்தார். இவ்வாறு கல்விக்காக அவர் செய்த சேவை வெளியில் தெரியவரவில்லை. எனினும், உண்மை என்னவென்பது நீதிமன்றம் ஊடாக தெரியவரும்.” – என்றார் மனோ கமகே.

அதேவேளை, நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.பாதாள குழு உறுப்பினர் கெஹெல்பத்ர பத்மேவுடன் தொடர்புள்ளதா என்பது பற்றி விசாரிக்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இருவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!