இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக கரம் கோர்க்கும் மகிந்த!
இந்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பகவானை வழிபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(Visited 3 times, 1 visits today)