May 8, 2025
Breaking News
Follow Us
தமிழ்நாடு பொழுதுபோக்கு

முதல்வரான விஜய்… ரசிகர்களின் போஸ்டரால் மதுரை முழுவதும் பரபரப்பு

விஜய் முதல்வராக பதவியேற்பதாக ஆரூடம் சொல்லும்படியான போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் ‘லியோ’ படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக ஒரு புறம் நடைபெற்று வர, மற்றொரு புறம் விஜய் அரசியலுக்கு தயாராகி வருவதாக, அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார் விஜய்.

இந்நிலையில் செய்தித்தாள் வடிவில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் விஜய் தலைமையில் டி.டி.வி., தினகரன், அன்புமணி ராமதாஸ், ஓ.பி.எஸ், அண்ணாமலை, ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் எடிட் செய்தி புகைப்படமாக போட்டுள்ளனர்.

அதேபோல் பிரதமர் மோடி தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும். பதவி ஏற்புவிழாவில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்து போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். தங்களது கனவை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்