“மதராஸி” முதல் நாளிலேயே வசூலை குவித்ததா? கோட்டை விட்டதா?
சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் வித்யுத் ஜாம்வால், ருக்மிணி வசந்த், பிஜு மேனன், மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தரின் இசையமைப்பில், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில் வெளியாகிய இப்படம், வெளியீட்டிற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆஃபிஸில் புயலை கிளப்பியுள்ளது. அதாவது மதராஸி படம் அனைத்து மொழிகளிலும் முதல் நாளில் சுமார் 13 கோடி வசூல் செய்ததாக sacnilk என்ற அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான அமரன் வசூலை விட சற்று குறைவாக இருந்தாலும், மிகப்பெரிய வணிக வெற்றிக்கு அறிகுறியாக உள்ளது. தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 62.22% ஆக்கிரமிப்பு விகிதத்தை பதிவு செய்த இப்படம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் முதல் நாள் காட்சிகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன.
வெளிநாடுகளிலும் மதராஸி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியீட்டிற்கு முன்பே டிரெய்லர் மற்றும் முதல் பாடல் வெளியீடு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. யூடியூபில் படத்தின் டைட்டில் டீசர் 20 மில்லியன் பார்வைகளை கடந்தது, இது படத்தின் மீதான ஆர்வத்தை உறுதிப்படுத்துகிறது.
சிவகார்த்திகேயன், காமெடி மற்றும் குடும்பப் படங்களில் இருந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, மதராஸி படமும் அவரது ரசிகர் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸின் மாஸ் ஆக்ஷன் பாணியும், சிவகார்த்திகேயனின் புதிய ஆக்ஷன் அவதாரமும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
முதல் நாள் வசூலில் பெரிய நகரங்களில் காட்சிகள் நிரம்பியதால், இந்த வார இறுதியில் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது





