மடகாஸ்கர் அரசுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராணுவம்
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில்(Madagascar) ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா(Andry Rajoelina) தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் Gen-Z(Generation Z) போராட்டத்திற்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது .
தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது.
இந்நிலையில், மடகாஸ்கர்(Madagascar) ராணுவத்தின் கேப்சாட் (CAPSAT)பிரிவு முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற Gen-Z போராட்டத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





