ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப தயாராகும் பிரான்ஸ்

ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்புவது குறித்து பரிசீலித்துவருவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக, உக்ரைன் போரில் ரஷ்யாவின் கை ஓங்கிவருகிறது.
அது தொடர்பாக அலோசிக்க மேக்ரான் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் 20 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்குவதை துரிதப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எக்காரணம் கொண்டும் ரஷ்யா வென்றுவிடக்கூடாது என கூறிய மேக்ரான், தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கப்போவதாக தெரிவித்தார்.
(Visited 14 times, 1 visits today)