2025ம் ஆண்டின் ஆரம்பம் வரை பெய்ரூட், தெஹ்ரானுக்கு ‘லுஃப்தான்சா’ விமானச் சேவை தொடர்ந்து ரத்து
 
																																		மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் நிலவிவரும் பதற்றத்துக்கிடையே தெஹ்ரான், பெய்ரூட் ஆகியவற்றுக்கான விமானச் சேவையை ஜெர்மானிய விமானச் சேவை நிறுவனமான ‘லுஃப்தான்சா’ 2025ஆம் ஆண்டு முற்பகுதிவரை தொடர்ந்து ரத்து செய்துள்ளது.
தெஹ்ரானுக்கான விமானப் பயணங்கள் ஜனவரி 31ஆம் திகதி வரையிலும் பெய்ரூட்டுக்குச் செல்லும் விமானப் பயணங்கள் பிப்ரவரி 28ஆம் திகதி வரையிலும் ரத்து செய்யப்படும் என்று அக்டோபர் 23ஆம் திகதி விமானச் சேவை நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையே, ‘சுவிஸ்’ விமானச் சேவை நிறுவனம் அதன் பெய்ரூட் விமானச் சேவையை ஜனவரி 18ஆம் திகதி வரை ரத்து செய்வதாகக் கூறியது. தன் பயணிகளுக்காகவும் ஊழியர்களுக்காக்கவும் உறுதியான திட்டமிடுதலை மேம்படுத்த இது உதவும் என்றும் தெரிவித்தது.
(Visited 13 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
