செய்தி

நீர்கொழும்பு நகரின் தாழ்நில பகுதிகள் பாதிப்பு! பலத்த மழையினால் சிக்கி தவிக்கும் மக்கள்

நீர்கொழும்பு நகரில் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கட்டுவை பிரதேசத்தில் புவக்வத்த பகுதியில் சிறிய பாலத்தின் மேலாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பிரதேசத்தின் சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் உறவினர் நண்பர்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

பெரியமுல்லை பிரதேசத்தில் தெனியாயவத்த , இறப்பர் வத்த, கோமஸ் வத்தை உட்பட பல தாழ்நில பிரதேசங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!