இலங்கை

வவுனியாவில் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (03) நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்து நடவடிக்கை வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாலக அசோக்குமாரவின் வழிநடத்தலில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.நிரோசன் தலைமையில் இ.மதன்ராஜ், செ.வன்னிநாயக, சேனாதீர, மதுசங்க, ரஞ்சுலா சுபத்திரா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!