இத்தனை கோடி ரூபாய் வரை நஷ்டமா? சமந்தாவின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள்

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
தற்போது சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்து வருவதால் அவருக்கு 12 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு படத்திற்கு 4 கோடி ரூ. வரை வாங்கும் சமந்தா, பிரேக் எடுப்பதால் தான் ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் சமந்தா திருப்பி கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
சமந்தா கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதற்காகச் சிகிச்சை எடுத்தும் முழுவதும் குணமாகவில்லை.
இதனால் ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் ஏற்கெனவே மூன்று, நான்கு படங்களில் ஒப்பந்தமாகி, அதில் நடிப்பதற்காக முன்பணம் வாங்கியிருந்தார். இப்போது அவர் அந்தத் தொகையைத் திருப்பிக் கொடுத்துள்ளார். இதனால் அவருக்கு 12 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.