கதை எழுத முடியாது… லோகேஷின் அதிரடி முடிவு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் திரைக்கு வந்த படம் கூலி. இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
பலரும் தங்களது எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என விமர்சனங்களை முன் வைத்தனர்.
சிலர் கடுமையாக இப்படத்தை விமர்சித்து ட்ரோல் கூட செய்தனர். ஆனாலும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றியடைந்துள்ளது.
இந்த நிலையில், கூலி படம் வெளிவந்தபின் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நேர்காணலில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதைப்பற்றி பேசிய லோகேஷ், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தை பற்றி நாம் குறை சொல்ல முடியாது.
கூலி படத்தை பொறுத்தவரை, இது ஒரு டைம் டிராவல் கதையோ, அல்லது LCU-வில் ஒரு பாகமோ என்று நான் சொல்லவே இல்லை.
நான் டிரைலரை கூட முதலிலேயே வெளியிடவில்லை. 18 மாதங்கள் அதை ரகசியமாகவே வைத்திருந்தேன். என்னால் ஒருபோதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்காக கதை எழுத முடியாது.
நான் ஒரு கதை எழுதுவேன். அது அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் நான் நன்றாக இருப்பேன். ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் நான் தொடர்ந்து முயற்சி செய்வேன்” என கூறியுள்ளார்.