இலங்கையில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள கலால் உரிமம் பெற்ற இடங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி மூடுவதற்கு கலால் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகைப்பாட்டின் கீழ் மது விற்பனைக்கான கலால் உரிமம் பெற்ற ஹோட்டல்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், டிசம்பர் 26, 2023 செவ்வாய்கிழமை உடுவப் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனைக்கான கலால் அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)





