Breaking – லிட்ரோ எரிவாயு விலை 300 ரூபாவால் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை, 3990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபா அதிகரிக்கப்பட்டு , புதிய விலை 1602 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மேலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 750 ரூபாவாகும்.




