மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மதுபான விற்பனை சடுதியாக வீழ்ச்சி
மலையக பெருந்தோட்டங்களை சூழவுள்ள பகுதிகளில் மதுபான விற்பனை வேகமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் கடந்த முறை மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதன் மூலம் கடந்த விற்பனை விலையுடன் ஒப்பிடுகையில் விற்பனை விலை சுமார் எழுபது வீதமாக குறைந்துள்ளதாக மலையக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விலைவாசி உயர்வுக்கு முன்னர் நாளொன்றுக்கு ஏழு இலட்சம் என்ற நிலையில் இருந்த இவரது மதுபானசாலையின் தினசரி விற்பனை தற்போது இரண்டு இலட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், மின் கட்டணம் மற்றும் ஊழியர் சம்பளம் செலுத்திய பின்னரும் எவ்வித இலாபமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறுகிய காலத்தில் பல சந்தர்ப்பங்களில் விலை அதிகரித்துள்ளமையும், மலையகப் பெருந்தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்களின் பொருளாதார நிலை மாறாததும் மதுபானங்களின் விற்பனை குறைவதற்கான பிரதான காரணமாகும்.