லிபியா வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

லிபியாவின் டெர்னா அணை உடைந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதன்படி 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 10 அம் திகதி லிபியாவில் டேனியல் புயல் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலை டெர்னா அணை உடைப்புக்கு காரணமாகியது.
அணை உடைந்த பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கில் ஏறக்குறைய 11000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில், அணையின் நிலைமை குறித்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததாகவும், அரசின் கவனிபற்ற தன்மையே இந்த அனரத்தத்திற்கு காரணம் எனவும் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)