போப் பிரான்சிஸிற்கு குவியும் கடிதங்கள்

போப் பிரான்சிஸிற்கு குணமடையவேண்டி மக்கள் அன்பு கடிதங்கள் குவிந்து வருவதாகவும், அதிகளவிலான கடிதங்கள் பிள்ளைகளிடமிருந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போப் பிரான்சிஸ் சென்ற மாதத்திலிருந்து மருத்துவமனையில் இருக்கிறார். வெவ்வேறு அளவுகள், நிறங்களில் கடிதங்கள் அனுப்பப்படுகின்றது.
மருத்துவமனையில் இருக்கும் போப்பிற்குப் பிள்ளைகள் கடிதங்களையும் ஓவியங்களையும் அனுப்புகின்றனர். ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வருவதாக அவற்றைக் கையாளும் அஞ்சல் நிலையம் கூறியது.
வாரத்திற்குச் சராசரியாக 150 அன்பு மடல்களாகும். ஒவ்வொரு நாளும் ஜெமெலி மருத்துவமனை வேன் ஒன்றை அனுப்புகிறது.
அது போப்பிற்கும் வத்திகனிற்கும் எழுதப்பட்ட கடிதங்களைப் பெற்றுவருகிறது. போப் இரவில் சுவாசக்கருவி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக வத்திகன் அண்மையில் தெரிவித்தது.
அவருடைய உடல்நலம் தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்று அவருடைய மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.