குஜராத்தில் கூகுள் fintech மையத்தை திறப்போம்!!! மோடியிடன் கூறிய சுந்தர் பிச்சை
கூகுள் தனது உலகளாவிய fintech செயல்பாட்டு மையத்தை குஜராத்தில் திறக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு அறிவித்தார்.
மோடி அரசின் முக்கிய பிரச்சாரமான டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வையையும் அவர் பாராட்டினார்.
“அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது, கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டொலர் முதலீடு செய்கிறது என்பதை நாங்கள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டோம்.
குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் எங்களின் உலகளாவிய fintech செயல்பாட்டு மையத்தைத் திறப்பதை நாங்கள் அறிவிக்கிறோம்” என்று சுந்தர் பிச்சையை மேற்கோள் காட்டி ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிஃப்ட் சிட்டி, அல்லது குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி, மாநில தலைநகரான காந்திநகரில் உள்ளது.
“டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு அவரது காலத்தை விட முன்னோடியாக இருந்தது, மற்ற நாடுகள் செய்ய விரும்பும் ஒரு வரைபடமாக நான் இப்போது பார்க்கிறேன்,” என்று கூகுள் தலைமை செயல் அதிகாரி மேலும் கூறினார்.
சுந்தர் பிச்சை தவிர, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஆகியோரும் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த வணிகத் தலைவர்களில் அடங்குவர்.