லியோவுடன் இணையும் “பென்ஸ்”… இதை எதிர்பார்த்தீர்களா?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், கலெக்ஷனில் கல்லா கட்டியது.
இது கைதி மற்றும் விக்ரம் திரைப்பட கதாபாத்திரங்களுடன் உருவாகியிருந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.
ஆனால், லியோவில் விஜய் குறித்த பிளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்ததாக சில தகவல்கள் வெளிவந்தன.
இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் பாலியும் நடித்து வருகின்றனர்.
மேலும், LCU எனப்படும் லோகேஷ் கனகராஜ் திரைப்பட கதைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் படமாகவே பென்ஸ் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், பென்ஸ் படப்பிடிப்பு லியோ படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் படமாக்கப்பட்டு வருவதால் பென்ஸ் கதை லியோ கதையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சில ஊகங்கள் உலா வருகின்றன.






