ஐரோப்பா செய்தி

ஜோன்சன் &ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனம் மீது இங்கிலாந்தில் வழக்கு தாக்கல்!

இங்கிலாந்தில்  ஜோன்சன் &ஜோன்சன் ( Johnson & Johnson) நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) கலக்கப்பட்ட குழந்தைகளுக்கான பவுடரை (baby powder) தெரிந்தே விநியோகம் செய்தமைக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

KP Lawவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் தாதுக்களின் கலவையான ஆஸ்பெஸ்டாஸ் (asbestos)   சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாதுக்கள் புற்றுநோய்களுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதை அறிந்திருந்தாலும் குறித்த நிறுவனமானது எந்தவொரு எச்சரிக்கையையும் வெளியிடாமல் அதனை விநியோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக  தூய்மை மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக சித்தரிக்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும்  ஜோன்சன் &ஜோன்சன்  ( Johnson & Johnson) நிறுவனம் அக் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. குறிப்பாக புற்றுநோய் ஏற்படும் என்பதை அறிந்திருத்தும் அதனை விநியோகித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

நிறுவனத்தின் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அதன் பேபி பவுடர் (baby powder )”தேவையான எந்த ஒழுங்குமுறை தரநிலைகளுக்கும் இணங்குவதாகவும், ஆஸ்பெஸ்டாஸைக் கொண்டிருக்கவில்லை, மேலும் புற்றுநோயை ஏற்படுத்தாது” என்றும் கூறியது.

டால்க் ( talc) கொண்ட பேபி பவுடரின் (baby powder) விற்பனை 2023 இல் இங்கிலாந்தில் நிறுத்தப்பட்டது. அதேபோல் அமெரிக்காவில் இது தொடர்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பல வழக்குதாரர்களுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!