ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்

ஜெர்மனி நாட்டில் கருணை கொலை மேற்கொள்ள புதிய சட்டம் ஒன்று நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கருணை கொலை செய்வது என்பது தடை செய்யப்பட்ட விடயமாகும்.

ஜெர்மனியின் குற்றவியல் சட்டத்தின் படி குற்றவியல் சட்டம் 216 இவ்வாறு கருணை கொலை செய்வது அல்லது கருணை கொலை செய்ய உதவி செய்வது குற்றமாகும்.

இந்நிலையில் ஜெர்மன் பாராளுமன்றத்தில் குற்றவியல் கோவையை மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதில் சில கடுமையான நோயாளிகளுக்கு கருணை கொலை செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஜெர்மன் பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்று தாக்கல் செய்யப்பட இருக்கின்றது.

இந்த சட்டத்திற்கு ஆதரவாக பிரதான ஆளும் கட்சியுடைய பங்காளி கட்சியான பசுமை கட்சி மற்றும் லிபரல் டெமோகரிஸ் கட்சியான எப்ஃ டி பி இரண்டு கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்த புதிய சட்டமானது வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டு ஜெர்மனியின் உச்ச நீதிமன்றமானது தற்பொழுது நடைமுறையில் உள்ள இந்த கருணை கொலை சம்பந்தமான சட்டத்தை திருத்த வேண்டும் என்று தமது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!