இலங்கை செய்தி

அடையாள அட்டையின்றி கடைக்கு வந்தவரை கைது செய்த பொலிஸார்: யாழில் நடந்தது என்ன?

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என்பதற்காக குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் தொடர்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

கைதானவரிடம் இருந்து கைரேகைகள் பெறப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். எதற்காக தனது கைரேகை பதிவு செய்யப்பட்டது என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

தான் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தை தனது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்துவதற்குகூட அவருக்கு அனுமதி வழங்காது கையடக்க தொலைபேசியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த மேற்படி குடும்பஸ்தர் வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு காலையில் சென்றுள்ளார்.

அவ்வேளையில் முச்சக்கர வண்டியில் நின்ற பொலிஸார் அவரை
அழைத்து விசாரித்து , தேசிய அடையாள அட்டையைக் கோரியுள்ளனர்.

அருகில் உள்ள கடைக்கு நடந்து வந்ததால் , பேர்ஸ் எடுத்து வரவில்லை , அருகில் தான் வீடு உள்ளது, எடுத்து வந்து தருகிறேன் என கூறியுள்ளார்.

இதன்போது அவரை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் பொலிஸார் இழுத்து ஏற்றியுள்ளனர்.

தனது வீட்டிற்கு அருகில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் வசிக்கின்றார்.

அவரிடம் தன்னை பற்றி விசாரியுங்கள் என கூறி அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க முற்பட்ட போது கையடக்க தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர்.

வீட்டில் மனைவிக்கு அழைப்பு எடுத்து அடையாள அட்டையை எடுத்து வருமாறு கூற தொலைபேசியை தருமாறு கோரிய போதிலும் அவருக்கு பொலிஸார் தொலைபேசியை கொடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை வலுக்கட்டாயமாக இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று , அங்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிங்களத்தில் எழுதிய தாள்களில் கையெழுத்து வாங்கி , இரண்டு கைகளின் அடையாளங்களையும் பெற்று , உடம்பில் உள்ள அங்க அடையாளங்களையும் குறித்துக்கொண்டனர்.

இதற்கிடையில் அடையாள அட்டை இல்லை எனக் கூறி பொலிஸார் தனது கணவனை கைது செய்து கொண்டு சென்றனர் என மனைவிக்கு அயலவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவர் அயலவர் ஒருவரிடம் அடையாள அட்டையை கொடுத்து , பொலிஸ் நிலையம் அனுப்பி வைத்து விட்டு , தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட அனுப்பாது அயல் வீட்டில் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

அடையாள அட்டையை பொலிஸ் நிலையத்தில் அயலவர் கொண்டு வந்து கொடுத்ததும் , கைதானவருக்கு உணவளித்து , அவரை பொலிஸார் விடுவித்தனர்.

மனைவி பொலிஸ் நிலையம் வந்ததும் , கணவனை கைது செய்த இடத்திலையே தாமே கொண்டு வந்து விடுவதாக கூறி மீண்டும் முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து கைது செய்த இடத்திற்கு அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

தன்னிடம் பெற்ற கைரேகையால் பின்னாட்களில் பொலிஸார் ஏதேனும் வழக்குகளை தொடுத்து விடுவார்களோ என்ற பயம் தனக்கு இருக்கிறது என பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் அச்சத்தில் இருக்கிறார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!