இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக களமிறங்கும் லசித் மலிங்க!!
இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி பங்கேற்கும் ஆரம்ப சுற்று போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்க செயல்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, லசித் மலிங்க வரும் 5 ஆம் திகதி முதல் இலங்கை அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




