இலங்கை செய்தி

கொல்லப்பட்டாலும் அழிக்க முடியாத குரல் லசந்த ,இன்றுடன் 17 வருடங்கள் -கொழும்பில் நினைவு தினம்  அனுஷ்டிப்பு

ஊழல் மோசடிக்கு எதிராக பேனாவை பயன்படுத்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன.

மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதன் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்  கொழும்பில் உள்ள பொரளை கல்லறையில் இன்று அனுசரிக்கப்பட்டது.

அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊடக வல்லுநர்கள் மலர்கள் வைத்து  மெழுகுவர்த்திகளை ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினர்.

லசந்த மணிலால் விக்ரமதுங்க,  2009 ஆம் ஆண்டு ஜனவரியில் படுகொலை    செய்யப்பட்டார்.

அவர் அரசியல்வாதி, ஒளிபரப்பாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக தமது உயிரையும் துச்சமென எண்ணி சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளையும், மோசடிகளையும் மக்களுக்கு துணிச்சலாக பகிரங்கப்படுத்தினார்.

எவராலும் நெருங்க முடியாத தகவல்களை மிக சாதுரியமாக அண்மிக்கும் ஆளுமையும், திறனும் கொண்ட அவர் அதிசிறந்த ஆய்வுக் கட்டுரை ஆசியராக பல மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பல தடவைகள் உயிர் அச்சறுத்தலை அவர் எதிர்கொண்டார்.

இறுதியாக 2009 ஜனவரி 08 ஆம் திகதி முற்பகல் 10.25 அளவில் லசந்தவின் உயிர் குழுவொன்றினால் பறிக்கப்பட்டது.

தொழிற் தளத்திற்கு பயணிக்கும் வழியில் இரத்மலானை அத்திட்டிய வீதியில் லசந்த விக்ரமதுங்கவை வழிமறித்த ஆயுதக் குழுவொன்று வழிமறித்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டபோது லசந்தவிடம் பேனாவும்,  குறிப்பேடும் மாத்திரமே இருந்தன.

சர்வதேச ரீதியில் பல விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்க அச்சமின்றி முன்னெடுத்தப் பயணத்தால் அவர் கொல்லப்பட்ட பின்னரும் ஐ.பி.ஐ வேல்ட் பிரஸ் பிரீடம் ஹீரோ விருதினால் கௌரவிக்கப்பட்டார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!