எகிப்திய பிரமிட்டுக்களுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி நகரம்

எகிப்தின் கிசாவில் உள்ள புகழ்பெற்ற எகிப்திய பிரமிட்டுக்களுக்கு அடியில் மிகப்பெரிய நிலத்தடி நகரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
ரேடார் கருவிகளின் உதவியுடன் ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் தெளிவுத் திறனுடனான புகைப்படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும் பிரமிட்டுகளுக்கு அடியில் 2,100 அடிகள் மேல் பரந்து விரிந்துள்ள எட்டு தனித்துவமான செங்குத்து உருளை வடிவில் கலைப்பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்கொட்லாந்து பல்கலைக் கழகத்தின் நிபுணர் மற்றும் இத்தாலியில் உள்ள பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி ஆகியோரே இந்த பயணத்திற்குத் தலைமை தாங்கியுள்ளனர்.
இந்தநிலையில், பல தொல்பொருள் நிபுணர்கள் இந்த கூற்றினை மறுத்து அவை அனைத்தும் போலி செய்திகள் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
(Visited 44 times, 1 visits today)