இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் நெலுவ, பத்தேகம, யக்கலமுல்ல மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலக பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுகள், மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய, முலட்டியன, அக்குரஸ்ஸ, கொட்டபொல, பிட்டபெத்தர மற்றும் பஸ்கொட பிரதேச செயலக பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை மற்றும் கிரிஎல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)





