நிலச்சரிவு அபாயம் – பதுளை மாவட்டத்தில் இருந்து 238 குடும்பங்கள் வெளியேற்றம்!
நிலச்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டம் முழுவதும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.
“பதுளை மாவட்டத்தில் உள்ள பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 14 பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. களுகெல்லையில் 50 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 129 பேர் நிலச்சரிவு காரணமாக பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வெளியேற்றங்களும் நேற்று (10) நிறைவடைந்ததாக அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.





